சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்குடன் அரசு நடவடிக்கை

0
35

சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே இலக்கு என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற 27வது கைதிகள் தின விழாவில் பங்கேற்று உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிக்கையில்,

கைதிகளுக்காக கைதிகள் நலச் சங்கம் வழங்கும் சேவை பாராட்டத்தக்கது சிறைகளில் தற்போது கைதிகள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. அந்த நெரிசலைக் குறைத்து தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரின் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் வசதிகளை உருவாக்குவதும் மிகவும் முக்கியம்.

சட்டத்தின் முன் அனைத்து மக்களும் சமம். ஒரு அரசாங்கமாக, சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்வதன் மூலம் சமத்துவ நாட்டை உருவாக்குவோம். என்று ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கைதிகள் நல தினத்தை முன்னிட்டு, நாட்டில் உள்ள 28 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய கைதிகளுக்கான ஆன்மீகம், விளையாட்டு, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சட்ட ஆலோசனை திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here