ஜனாதிபதி செயலக வாகனங்களை பழுதுபார்க்க 640 மில்லியன் ரூபாய் செலவு

0
111

கடந்த ஆண்டு ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை பழுதுபார்ப்பதற்காக ரூ. 640 மில்லியன் செலவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையை மேற்கோள் காட்டி திவயின செய்தித்தாள் இதனை வெளியிட்டுள்ளது.

வாகன பழுதுபார்ப்புகளுக்காக மொத்தம் ருபாய் 645,336,744 ஒதுக்கப்பட்டுள்ளது.

53 வாகனங்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 17 முறை வரை மீண்டும் மீண்டும் பழுதுபார்க்கப்பட்டதாக அறிக்கை மேலும் வெளிப்படுத்தியுள்ளது.

1 மில்லியன் ரூபாய் முதல் 40 மில்லியன் ரூபாய் வரை மதிப்புள்ள மொத்தம் 189 வாகனங்கள் பழுதுபார்க்கப்பட்டன எனவும் தனிப்பட்ட பழுதுபார்ப்பு செலவுகள் ரூ. 1 மில்லியன் முதல் ரூ. 28 மில்லியன் வரை இருந்தன எனவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here