‘பாவனைக்கு பொருத்தமற்ற மின்சார பொருட்களால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது’

0
57

நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பதற்கு திறமையற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் ஒரு முக்கிய காரணம் என்று இலங்கை நிலை பெறத்தகு எரிசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் ஹர்ஷ விக்ரமசிங்க, 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் காலாவதியான ஏர் கண்டிஷனர்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவதாக ஆய்வுகள் காட்டுகின்றன என தெரிவித்துள்ளார்.

“மேல் மாகாணத்தில் மட்டும், மூன்றில் ஒரு குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்துவதற்குப் பொருத்தமற்ற நிலையில் உள்ளது. இதன் விளைவாக மாதத்திற்கு கூடுதலாக 100 யூனிட்கள் அல்லது அதற்கு மேற்பட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

குறைந்த செயல்திறன் கொண்ட சாதனங்களின் இறக்குமதியை அரசாங்கம் ஏற்கனவே கட்டுப்படுத்தியுள்ளது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர் கண்டிஷனர்கள் மீதான சட்டத்தை கடுமையாக்கும் என்றும் விக்ரமசிங்க மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here