தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் கூட்டத்துக்கு சென்ற மக்களில் பலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய் கட்சியின் பாரிய போட்டியாளர்கள் என கருதப்படும் திராவிட முன்னேற்ற கழகம் சார்பிலான துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளதோடு சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தள்ளார்.
இதேநேரம் தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




