இலங்கையில் LGBTIQ இலக்காக கொண்ட சுற்றுலா – நாமல் குற்றச்சாட்டு!

0
106

LGBTIQ சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இயற்கை அழகும் கலாச்சார பாரம்பரியமும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க போதுமானது என்றும், பாலியல் நோக்குநிலை அல்லது பாலினம் தொடர்பான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

“எங்கள் சுற்றுலா மேம்பாடு பாலியல் நோக்குநிலை அல்லது பாலின பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது.

பாலியல் விருப்பங்களைப் பொருட்படுத்தாமல், உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க எங்கள் பாரம்பரியம் போதுமானது,” என்று நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளர்.

“இதுபோன்ற உணர்திறன் மிக்க பிரச்சினைகளை மிகவும் பொறுப்புடன் அணுக வேண்டும்” என்று வலியுறுத்தி, இதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அதன் கண்கவர் இயற்கை அழகு, கலாச்சாரம் மற்றும் மரபுகள் காரணமாக நீண்ட காலமாக ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருந்து வருகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, “சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக நாம் பாலியல் அடையாளத்தில் கவனம் செலுத்தத் தேவையில்லை” என்று நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here