சீனாவின் முன்னாள் விவசாய அமைச்சருக்கு மரண தண்டனை!

0
78

சீனாவின் விவசாய மற்றும் கிராமிய  விவகாரத் துறையின் முன்னாள் அமைச்சா் டொங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சா் டொங் ரெஞ்சியன் 2007 முதல் 2024-ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் உள்ளூா் அளவில் அவா் வகித்த பல்வேறு பதவிகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

வணிக நடவடிக்கைகள், திட்ட ஒப்பந்தம் மற்றும் வேலை வழங்குதல் போன்ற விடயங்களில் சட்டவிரோதமாக மொத்தம் 268 மில்லியன் டொலர் ரொக்கமாகவும் மதிப்புமிக்க பொருட்களாகவும் அவா் பெற்றுள்ளாா்.

இந்த வழக்கை விசாரித்த வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுனின் இடைநிலை நீதிமன்றம், அவருக்கு மரணதண்டனை விதித்து நேற்று தீா்ப்பளித்தது. மேலும், அவரது அரசியல் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இருப்பினும், தனது குற்றங்களை ஒப்புக்கொள்வதில் அவா் அளித்த ஒத்துழைப்பு, சட்டவிரோத சொத்துக்களை திருப்பித் தருவது உள்ளிட்ட காரணிகளைக் கருத்திற் கொண்டு, நீதிமன்றம் தனது இறுதித் தீா்ப்பில் அவருக்கு கருணை வழங்கியது.

இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது நன்னடத்தையை கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம் என நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here