பிலிப்பைன்ஸில் கடந்த 30ஆம் திகதி 6.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரையில் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சுமார் 200 பேர் வரையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து மலைப்பகுதி கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இம் மண்சரிவில் சிக்கி பலர் புதையுண்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அச்சம் கொள்ளப்படுகிறது.