நானுஓயாவில் ஆயுத பூஜை – முச்சக்கரவண்டி சாரதிகளால் ஏற்பாடு!

0
90

நானுஓயா பிரதான நகரில் ‘உதயம் முச்சக்கரவண்டி’ சாரதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆயுத பூஜை விழா மற்றும் சரஸ்வதி பூஜை நேற்று (02) வியாழக்கிழமை மாலை நானுஓயா பிரதான நகரில் கொண்டாடப்பட்டது.

வழக்கமாக தங்களது தொழில் மற்றும் பயணங்களுக்கு உதவியாக இருக்கும் முச்சக்கர வண்டிகளை இறைவனுக்குச் சமர்ப்பித்து வழிபடும் ஒரு பாரம்பரியமாகும்.

அதற்கமைய நானுஓயா உதயம் முச்சக்கர வண்டி சாரதிகள் தங்களுடைய வாகனங்களை சுத்தப்படுத்தி, அலங்கரித்து, வாகனத்தின் முன்னே பொட்டு வைத்து, மலர் மாலை அணிவித்து , வண்ண பலூன்கள் மூலம் அலங்காரம் செய்து வாகனத்தின் பயன்பாட்டுக்கு நன்றி தெரிவித்து ஆயுத பூஜை விழா மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது .

பின்னர் பிரதான நகரினை முச்சக்கர வண்டிகள் மூலம் ஊர்வலமாக சுற்றி வந்தனர் .

இந் நிகழ்வில் நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நானுஒயா பிரதான நகரில் முக்கிய வர்த்தகர்கள் , ஊடகவியலாளர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here