இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையை நீடிப்பதற்கான திருத்தப்பட்ட வரைவில் 22 நாடுகள் கையொப்பமிடப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரைவு திட்டத்தின் முக்கிய ஆதரவாளர்களாக கனடா, மலாவி ஐக்கிய ராஜ்யம், வடக்கு மொசிட்டோனியா, மொண்டினீக்ரோ ஆகிய நாடுகள் செயல்படுகின்றன.
இந்த நிலையில் 22 நாடுகள் இந்த வரைவு திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் நோக்கில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த தீர்மானம் எதிர்வரும் அக்டோபர் 8-ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இந்த ஆணை நீடிப்பு இலங்கையை அடுத்த இரண்டு வருடங்களுக்கு மனித உரிமை பேரவையின் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கும்.
அத்துடன் இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்தின் காலமும் நீடிக்கப்படும்.
இந்த வரைவு அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சி இனப்பாகுபாடு மற்றும் இதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் என்பவற்றையும் ஏற்றுக் கொள்வதையும் வரவேற்கிறது.
இந்த சட்ட வரைவு பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.