மும்பையைச் சேர்ந்த தீபக் கோத்தாரி என்ற தொழிலதிபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு லுக் அவுட் சர்க்குலர் (எல்ஓசி) நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டும் லுக் அவுட் சர்க்குலர் நோட்டீஸை ரத்து செய்யவும் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், “முதலில் ரூ.60 கோடியை நீதிமன்றத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி டெபாசிட் செய்துவிட்டு வெளிநாடு செல்லலாம். மேலும், அவருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள லுக் அவுட் சர்க்குலர் நோட்டீஸை ரத்து செய்ய முடியாது. நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது” என்று உத்தரவிட்டார். மேலும் வழக்கை வரும் 14-ம் தேதிக்கு அவர் தள்ளிவைத்தார்
Hindu Tamil