2025ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், இன்று(10) 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வெனிசுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை ஊக்குவித்ததற்காகவும், சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றத்தை நோக்கி அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.