அரசாங்கத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டு பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, வெறும் காகிதத் தாள்களை வழங்கும் விளம்பர நிகழ்ச்சி மட்டுமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவின் மூலம் அவர் இவரை குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட மக்களுக்கு இந்திய நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகளுக்கான உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் விதமாக அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்று வழங்கப்படும் இந்த ஆவணங்கள் வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும் போது ஒரு நிகழ்வு நடத்தப்படும்.
இந்த நிகழ்வானது 2000 வீடுகளை கையளிப்பது அல்ல, வெறுமனே காகித தாள்களை கையளிக்கும் நிகழ்வு மாத்திரமே.
இவ்வாறு வழங்குவதற்கு எந்தவித நிகழ்வுகளும் ஏற்பாடு செய்திருக்க வேண்டியது இல்லை.
கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையக சமூகத்திற்காக எந்த ஒரு வேலையும் செய்யப்படவில்லை.
இந்த உண்மைகளை மறைப்பதற்காக அரசாங்கம் இவ்வாறான தந்திரோபாயங்களை மேற்கொள்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.