காதலன் வீட்டு விருந்துபசாரத்தில் காதலி கொலை, சந்தேகநபர்கள் கைது

0
8

வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில் அரச அதிகாரியான பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது காதலனின் வீட்டில் விருந்துபாசாரம் ஒன்றில் பங்குபற்றியபோது, அங்கு ஏற்பட்ட கலவரத்தில் குறித்த பெண் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சென்ற 11 ஆம் திகதி சனிக்கிழமை இச் சம்பம் இடம்பெற்றது.

மதுபான விருந்தின் போது இப் பெண்ணின் காதலனும் நண்பர்களும் முரண்பட்டதால், மோதல் ஏற்பட்டது எனவும் இதன்போது மண்வெட்டியால் காதலியான இப் பெண தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே இப் பெண் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்புக்கனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி அதிகாரியாக பணிபுரியாற்றி வரும் இப் பெண், மாவத்தகம வேவகெதர பகுதியை சேர்ந்த 37 வயதான நடேஷானி கீர்த்தி ராஜபக்ஷ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இக் கொலை தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்படுள்ளனர். கைதான இருவரும் காதலனின் உறவினர்கள் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here