கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்

0
12

கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகராக எச்.டீ.எம்.துஷார உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய அவர் அந்த பதவியிலிருந்து வைத்திய சேவை பிரிவின் பொது கடமைக்கென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில் கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி மற்றும் பொலிஸ் அதிகாரிக்கிடையில் ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here