எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபைக்குற்பட்ட நகர மற்றும் எல்லை பகுதிகளில் மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார உணவு பழக்கவழக்கம் தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜாமணி பிரசாந்த் தலைமையில் கொட்டகலை பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பண்டிகை காலத்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேவையான பாதுகாப்பு வழங்கவும் மற்றும் தரமானபொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும் வலியுறுத்தியதுடன் அதிக விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மற்றும் 18–19 ஆம் திகதிகளில் தொட்ட வாரியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் ஜேசுதாசன் யாகூலமேரி , உறுப்பினர் சுப்பையா மஹேந்திரன் மற்றும் பிரதேச சபையின் செயலாளர், திம்புல பத்தனை பொலிஸ் உத்தியோகத்தர் , லிந்துல பொலிஸ் உத்தியோகத்தர், கொமர்சல் இராணுவ முகாமின் உத்தியோகத்தர்கள் ,கொட்டகலை பொது சுகாதார வைத்திய நிலைய சுகாதார பரிசோதகர் என பலரும் கலந்து கொண்டனர்.
( எஸ்.ரோஷன்)