பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை முடியுமானால் இந்த வருட இறுதிக்குள்பத்து ரூபாய் அதிகரித்து வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார்.
இந்த வருடத்திற்குள் 1750 ரூபாவை பெருந்தோட்ட மக்களுக்கு நாளாந்த சம்பளமாக பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாக அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ள நிலையில், ஜீவன் தொண்டமான இந்த சவாலை விடுத்துள்ளார்.
நாம் ஆட்சியில் இருந்த கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இரண்டுசந்தர்ப்பங்களில் 250 ரூபா மற்றும் 350 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.
எனவே முடிந்தால் இந்த ஆண்டு அடிப்படை சம்பளத்தில் பத்து ரூபாயேனும் அதிகரித்து வழங்குமாறு அவர் தற்போதை ஆளும் தரப்புக்கு சவால் விடுத்துள்ளார்.
எமது ஆட்சி காலத்தில் சம்பள அதிகரிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் எதிரணியில் இருந்த பிரதிநிதிகள் எந்தவித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. மாறாக இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த அரசாங்கம் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் நாம் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்கவோம்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற சம்பளப் பேச்சுவார்த்தையின் போது நாம்1750 ரூபாய் அடிப்படை சம்பளமாக கூறிய போது ஜேவிபி தொழிற்சங்கங்கள் 2,138 ரூபாவை அடிப்படை சம்பளமாக கூறியது.
அந்த தொழிற்சங்கம் இன்று 2138 ரூபா அடிப்படை சம்பளம் என்ற நிலைப்பாட்டில் உள்ளதா அவ்வாறு இல்லையெனில்,நாம் கோரிய 1700 ரூபாய் நியாயமானது என ஏற்று கொள்கிறார்களா?
ஆரம்பத்தில் 1700 ரூபாய் அடிப்படை சம்பளம் எனக்கு கூறப்பட்ட போதிலும் தற்போது அதனை நாள் சம்பளம் என்று குறிப்பிடுகின்றனர். அடிப்படை சம்பளத்தில் அதிகரிப்பு எதுவும் செய்யாமல் நாள் சம்பளத்தை அதிகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.