பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மிர்பூர் பகுதியில் உள்ள 4 மாடி கொண்ட ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ பரவியதன் காரணமாக சுமார் 16 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த ஆடை உற்பத்தி நிறுவன கட்டடத்திற்கு எதிரே ரசாயன கிடங்கு ஒன்றில் ரசாயனபொருட்களில் வெடிப்பு ஏற்பட்டதையடுத்து தி பரவியுள்ளது.
குறித்த தீ ஆடையக கட்டிடத்திலும் பரவியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது குறித்த ஆடை உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
ரசாயன கிடங்கிலிருந்து உருவான விஷவாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்ததாக தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அத்துடன் மேலும் காயமடைந்த தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.