நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட குழுவினர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர்.
அவர்களை விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அழைத்துவரப்பட்ட சந்தேக நபர்களில் இஷாரா, ஜேகே பாய், சுரேஷ் மற்றும் தக்ஷி ஆகியோர் அடங்குவதாகவும் இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்ற பிரிவில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர்களை நாட்டுக்கு அழைத்து வர அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர்.
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவற்றின் கொலை தொடர்பில் இஷாரா உள்ளிட்டோர் கடந்த பெப்ரவரி முதல் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.