மக்களுக்கான படமாக ‘டீசல்’ இருக்கும்: ஹரிஷ் கல்யாண் நம்பிக்கை

0
18

ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, சச்சின் கெடேகர், விநய், விவேக் பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘டீசல்’. சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் வழங்க, எஸ்.பி. சினிமாஸ் தயாரித்துள்ளது. அக்.17-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசும்போது, “ஆக் ஷன் படங்கள் மீது எனக்கு அதீத விருப்பம் உண்டு. அதற்கான சரியான கதைக்காகக் காத்திருந்தேன். ‘டீசல்’ படம் அப்படி அமைந்தது. தங்கத்தை விட அதிக மதிப்புமிக்கதாகப் பார்க்கப்படும் எரிபொருள் உலகத்துக்குப் பின்னால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்தப் படம் சொல்லி இருக்கிறது. ஆக் ஷன் படத்துக்கான சரியான மீட்டரை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறேன் என்று டிரெய்லர் பார்த்த பலரும் பாராட்டினார்கள்.

பெட்ரோல், டீசல் என எளிய மக்களின் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கும் இந்த பொருளுக்குப் பின்னால் இப்படியான மாஃபியா நடக்கிறதா என்பதைக் கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கான படமாக இது இருக்கும். இந்த படத்துக்காக 30 நாட்களுக்கு மேலாகக் கடலில்
ஷூட் செய்து இருக்கிறோம். அதுல்யாவும் சூழலைப் புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்தார். நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம். தீபாவளிக்கு என் படம் வருவது மகிழ்ச்சி” என்றார்.

Hindu Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here