தனுஷை நடிக்க வைங்க சார் என பேசிய சிம்பு!

0
22

நடிகர் சிலம்பரசன் ‘தக் லைப்’ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் ‘வடசென்னை’ படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.

இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக அரசன் படத்தின் ப்ரோமோ திரையிடப்பட்டது. இந்த ப்ரோமோ சிறப்பாக உள்ளதாக பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நெல்சனிடம் நான் கூறிய கதையில் தனுஷை நடிக்க வைங்க சார் என்று சிம்பு பேசிய வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here