வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபரை உற்சாகமாக வரவேற்ற அதிபர் டிரம்ப்!

0
13

உக்ரைன் – ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்டில் அலாஸ்காவில் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதற்கிடையே, அதிபர் டிரம்ப் சமூக ஊடக பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷிய அதிபர் புதினுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினேன். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச திட்டமிட்டுள்ளேன். சந்திப்புக்கான தேதி இன்னும் இறுதி செய்யப் படவில்லை. இரு வாரங்களுக்குள் இந்த சந்திப்பு நடக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்குச் சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் வாசலில் வந்து வரவேற்றார் அதிபர் டிரம்ப்.

இந்தச் சந்திப்பின்போது அதிபர் புதினுடன் நடந்த உரையாடல் விபரங்கள் மற்றும் உக்ரைனுக்கு ஏவுகணை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here