பல ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது

0
67
arrest

டி56 ரக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிதி குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

ஹங்கம பகுதியில் துப்பாக்கி மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை குறித்த பிரிவின் அதிகாரிகள் கடந்த 17 திகதி கைது செய்துள்ளனர்.

இதன்போது அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கி, 63 தோட்டாக்கள், மற்றும் 12 போர் தோட்டாக்களை சுடக்கூடிய இரண்டு துப்பாக்கிகள், 12 போர் தோட்டாக்களில் 25 தோட்டாக்கள் மற்றும் ரிவோல்வர் ரகத் தோட்டாக்கள் ஒரு டிப்பர் மற்றும் கெப் வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் குறித்த வாகனத்தை திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் வழங்கியதாகவும் அவர் தற்போது தடுப்பு காவலில் உள்ளதாகவும் சந்தேக நபருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கமைவாக குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நிதி குற்றப் புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here