ரசிய எரிவாயு நிலையம் மீது உக்ரெயன் தாக்குதல், ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு பாதிப்பு

0
5

உக்ரெய்ன் தலைநகர் கிவ்வில் இருந்து 1,700 கிமீ தொலைவில் ரசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரேன்பர்க் எரிவாயு நிலையம் மீது உக்ரெயன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிவாயு நிலையத்தின் ஒரு பகுதி முற்றாக தீயில் எரிந்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ரொய்டர்ஸ் (Reuters) தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் இல்லையென ஒரேன்பர்க் பிராந்திய ஆளுநர் யெவ்ஜெனி சோல்ட்செவ் தெரிவித்துள்ளார். அதேநேரம் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக உக்ரெயன் தெரிவித்துள்ளது.

இத் தாக்குதல் தொடர்பாக ரசிய பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக, ரசிய ஊடகமான கொம்மர்சன்ற் (Kommersant) தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை இரவு, அதாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக்ரெயன் நடத்திய 45 ட்ரோன்களில் 23 ரோன்களை இடைமறித்து அழித்தாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என அந்த ரசிய ஊடகம்  தெரிவித்துள்ளது.

அதேவேளை இத் தாக்குதலை ரசிய கண்டித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் நேரத்தில் உக்ரெயன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரசிய ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

ரசியாவும் உக்ரெயன் மீது பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here