களனிவெளி மார்க்கத்தில் ரயிலொன்று தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனிவெளி மார்க்கத்தில், கொஸ்கம மற்றும் அவிசாவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று தடம் புரண்டதால் அந்த மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் குறித்த பகுதியில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.