‘மேதகு ; பாகம் 1’, ‘சல்லியர்கள்’ ஆகிய படங்களை இயக்கிய தி.கிட்டு இயக்கியுள்ள படம், ‘ஆட்டி’. லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அபி நட்சத்திரா, காதல் சுகுமார், சவுந்தர், பிரவீன் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்.24-ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இசக்கி கார்வண்ணன் கூறும்போது, “இது பீரியட் கதையை கொண்ட படம். கொஞ்சம் வரலாற்றுப் பின்னணியிலும் இதன் கதை இருக்கும். சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கி இருக்கிறோம். தவறு செய்யும் சிலர் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கொல்லப் படுகிறார்கள். அவர்களைக் கொன்றது யார்? ஏன் கொல்கிறார்கள் என்பது கதை. கொடைக்கானலில் இதன் கதை நடக்கிறது. குன்னூர் அருகே நடு காட்டுக்குள் யாரும் இதுவரை படப் பிடிப்பு நடத்தாத பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். படப்பிடிப்பு நடக்கும்போதே, விலங்குகள் எங்களைச் சுற்றி நடமாடிக் கொண்டு இருக்கும். அந்த அனுபவம் புதிதாக இருந்தது. படப்பிடிப்பு எப்போதோ முடிவடைந்துவிட்டது. சரியான நேரத்துக்காக காத்திருந்து இப்போது ரிலீஸ் செய்கிறோம். இந்த படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார்.
HinduTamil