“ஒக்டோபர் மாத சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டல் நிகழ்வை” முன்னிட்டு 2025 ஒக்டோபர் 22 ஆம் திகதி, அதாவது நாளைய தினம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முடியுமாயின் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்துவருமாறு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், ஒக்டோபர் மாத சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டலை முன்னிட்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் நாளைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அணிவதற்காக அடையாளச்சின்னமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அடையாளச்சின்னம் உறுப்பினர் நுழைவாயிலில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.