அதிரடியாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கத் திட்டம் – ஐ.தே.கவில் ஹரீனுக்கு புதிய பதவி!

0
77

ஐக்கிய தேசியக் கட்சி உடனடியாக அமலுக்கு வரும் வகையில் புதிய முக்கிய பதவியை உருவாக்க முடிவு செய்துள்ளது.அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அரசியல் அணிதிரட்டல் பிரதி செயலாளர் நாயகமாக (Deputy Secretary General of Political Mobilization) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட பதவி, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதாகும். அதற்கு மேலதிகமாக, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் ஆயிரம் கூட்டங்களுக்கும் ஹரின் பெர்னாண்டோ பொறுப்பேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here