தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ரூ.2500 அவசியம்!

0
106

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள சூழ்நிலையில் நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை நிர்ணயிப்பது அநீதி எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலையக மக்களுக்கு காகிதங்களை வழங்கிக்கொண்டிருக்காமல், காணி உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் தனது பாதீட்டு உரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சிறிதுங்க ஜயசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here