அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக கனடா அறிவித்துள்ளது.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுதன் பின்னர் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை அதிகரித்ததுடன் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் வரியை அதிகரித்தார்.
இதன் காரணமாக வரியை குறைப்பதற்கு கனடா மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு இணங்கி இருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய வரிகள் தொடர்பில் கனடா தொலைக்காட்சியில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது இந்த விளம்பரத்தில் ட்ரம்பின் வரிவிதிப்புக்கள் போர்களை உருவாக்கலாம் என உரையாற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த கனடா தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா சென்றுள்ள மார்க் கார்னி கோலாலம்பூரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
		
