பாராளுமன்ற சபை அமவர்வுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சராகவிருந்த நிமல் சிறிபால டி சில்வா அடிக்கடி நித்திரை கொள்வது தொடர்பில் ஊடகங்கள் பலவும் செய்தி வௌியிட்டிருந்தன.
இம்முறை பாராளுமன்றத்தில் அவர் இல்லாத குறையை நிவர்த்திக்கும் வகையில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா வரவு செலவு திட்ட உரையின் போது ஆழ்ந்த நித்திரையில் இருந்தமை ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதுக்கு விளக்கமளித்துள்ள அர்ச்சுனா எம்.பி, ” நான் என்னை விரும்புவதை விடவும் இந்த ஊடகங்கள் என்னை விரும்பி கொண்டிருக்கின்றன! இன்றைக்கு வரவு செலவு திட்டம் செய்தி அல்ல! நான் தான் ஊடகங்களின் செய்தி! சுத்தி சுத்தி வீடியோ எடுத்துருக்காங்க! ஒரு நாட்டின் தந்தை கதை சொல்லும்போது பாட்டுப்பாடி தாலாட்டும் போது நித்திரை கொள்ளக் கூடாதா அப்பா? “




