தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது பாகிஸ்தான் அணி!

0
85

தென் ஆப்பிரிக்க அணி உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுடக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.

இந்நிலையில், தொடரின் கடைசி போட்டி சனிக்கிழமை அன்று பைசலாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 37.5 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷாஹின் அப்ரிடி, முகமது நவாஸ், சல்மான் ஆகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. சயீம் அயூப் 77, பாபர் அஸம் 27 மற்றும் முகமது ரிஸ்வான் 32 ரன்கள் எடுத்தனர். 25.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து ஆட்டத்தையும், தொடரையும் பாகிஸ்தான் அணி வென்றது.

HinduTmail

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here