விளக்குகளை அணைத்து வணிக வகுப்பில் பயணித்த அமைச்சர்கள் – எதிர்கட்சி குற்றச்சாட்டு!

0
66

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வந்த அழைப்பிதழ்கள் மற்றும் பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி நான்கு அமைச்சர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேற்படி அமைச்சர்கள் நால்வரும் இந்த வெளிநாட்டுப் பயணத்தின்போது விமானத்தில் சிக்கன வகுப்பு பயணச்சீட்டுடன் பயணித்து, விளக்குகளை அணைத்த பின்னர் இரகசியமாக வணிக வகுப்புக்கு மாறிச் சென்று அமர்ந்துகொண்டனர் எனவும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு நடந்துகொள்வது மக்கள் பணத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகும் என்றும், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குச் சிறைத் தண்டனை கூட கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

மேற்படி அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் முதலில் ஆராய வேண்டும் என்றும், இந்தச் செயல் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here