தேசிய T20 இல் விளையாட வியாஸ்காந்த்திற்கு அழைப்பு

0
4

பாகிஸ்தானில் நடைபெறும் T20 முத்தரப்பு தொடருக்கான தேசிய ஆண்கள் அணியில் இடம்பெறுவதற்காக விஜயகாந்த் வியாஸ்காந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், ‘ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் இலங்கை ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த அவர் கட்டாரில் இருந்து நேரடியாக பாகிஸ்தானுக்கு பயணம் வசெய்யவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட தசை இறுக்கத்திலிருந்து வனிந்து ஹசரங்க இன்னும் முழுமையாக குணமடையாததால் வியாஸ்காந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முத்தரப்பு தொடரின் இலங்கையின் முதல் ஆட்டம் நவம்பர் 20 ஆம் திகதி சிம்பாப்வேக்கு எதிராக நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here