பெண் மையக் கதையில் மீண்டும் கல்யாணி!

0
112

நடிகை கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ஹீரோ’ என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் நடித்த அவர், ரவி மோகனின் ‘ஜீனி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘லோகா: சாப்டர் 1 – சந்திரா’ படம், தமிழ், மலையாளம், தெலுங்கில் ஹிட்டானது. இதில் அவர் பெண் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இப்போது நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் பெண் மையக் கதாபத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதை அறிமுக இயக்குநர் திரவியம் எஸ்.என்.இயக்குகிறார். பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், தங்கபிரபாகரன் ஆர் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இதில் தேவதர்ஷினி, வினோத் கிஷண் உள்பட பலர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

hindutamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here