கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

0
27

மாவனெல்ல பொலிஸ் பிரிவின் பஹல கடுகண்ணாவையில் வீடு மற்றும் கடை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த அனர்த்தம் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவுக்காக வந்த ஏழு பேர் உட்பட 10 பேர் மண் சரிவு ஏற்பட்டபோது ஹோட்டலில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் கடையின் உரிமையாளர் அவசர தேவைக்காக வெளியே வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலின் உரிமையாளர் குநாதன் சசிதரன் என்ற நாற்பது வயதுடையவர். அவரது தந்தை ராசலிங்கம் கருணாகரன் (66) மற்றும் மனைவி நிஷாந்தனி கருணாகரன் (39) ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த தாயார் சிகிச்சைக்காக மாவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடையின் உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் தப்பித்துவிட்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க பொலிஸார், இராணுவம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட குழுவினர் 20 மணி நேர நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here