அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி நான்காம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவனையின் முதல் கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் திகதி திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025ஆம் கல்வி ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையும். இந்த பாடசாலைகளுக்கு டிசம்பர் 27 முதல் 2026 ஜனவரி நான்காம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




