ஜனாதிபதி இன்று (25) காலை சதிஷ்சந்திர எதிரிசிங்கவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள களனியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




