கள்ளக்குறிச்சியில் பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பேசியதாவது;
கல்வராயன் மலையின் கம்பீரமும், ஆன்மிகமும் நிறைந்த கள்ளக்குறிச்சியில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. திராவிட மாடல் என்பது சாதனை திட்டங்கள் நிறைந்த அரசு. சிலர் வாயிலேயே வடை சுடுகின்றனர். மக்களுக்கு நேரடியாக பயன்படக்கூடிய திட்டங்களை கொடுத்து, மக்களை நேரடியாக சந்திக்கும் அரசு இது. தீயணைப்பு, மீட்பு நிலையம், உயர்மட்டப் பாலம், சாலைகள் போன்ற பல திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம்.




