Happy New Year என்று வாழ்த்தினாலும் 2026 சுபமான வருடமல்ல!

0
65

பிறக்கவிருக்கும் 2026 ஆம் ஆண்டு இனிய புத்தாண்டாகட்டும் என்று நாம் பிரார்த்தனை செய்தாலும், நாம் எதிர்ப்பது போல நல்ல வருடமாக அல்லாமல் மேலதிக பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை வருமென முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றி கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இப்போது நாம் கடன் செலுத்தாத சலுகை காலத்தை கடத்துகிறோம். பலதரப்பு கடன்களை மாத்திரமே நாம் செலுத்துகிறோம். இருதரப்பு கடன்களை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் எம்கு இன்னும் கிட்டவில்லை.

அதேநேரம் பெரிஸ் கிளப் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு நாம் வழங்கியுள்ள இணக்கப்பாடுகளின் பிரகாரம் கடன்களை செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். அதனை புறக்கணிக்க முடியாது. அதன் விளைவாக எமது நாட்டுக்கு 2027 ஆம் ஆண்டு 3911 அமெரிக்க டொலர் மேலதிக நிதி தட்டுப்பாடு ஏற்படும். அதனை நிவர்த்திக்க ஒரு தொகையை ஐஎம்எப் கடனாக வழங்கும். ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஒரு பகுதி தொகையினை வழங்கும். அது தவிர்ந்து இலங்கையிடம் உள்ள பணத்தையும் சேர்த்து பார்க்கும் போது மிகுதிப்படும் தொகையினை சர்வதேச சந்தையில் கடனாக பெறுமாறு இலங்கை வலியுறுத்தும்.

ஆனால் அந்த கடனை பெறுவதற்கு எம்மிடம் கையிருப்பு தேவைப்படும். இவ்வாறான கையிருப்பு குறைந்ததன் பலனை நாம் அனுபவித்திருக்கிறோம். எண்ணெய் கப்பல்கள் வந்தாலும் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் நாடு தள்ளாடியது. இவ்வாறான நிலையில் எமது கடன் பத்திரங்களை உலக நாடுகள் ஏற்காது. அதற்காகவே கடந்த அரசாங்கம்  கையிருப்பை 6.2 ஆக அதிகரிக்கச் செய்தது.  துரதிஷ்டவசமாக இன்றும் கையிருப்பு 6.2 ஆகவே உள்ளது.  புதிய அரசாங்கம் வந்து பதினைந்து வருடங்களுக்கு பின்பும் இந்த நிலை இருப்பது வேதனைக்குரியது.

அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்பு எவ்வாறான கதைகளை கூறினாலும் அதனை முகாமைத்துவம் செய்வது அத்தனை இலகுவானது அல்லவென புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here