கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

0
48

கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை நடத்தி, அறிக்கை பெறுவதற்காக மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பியசேன ரணசிஹ்க தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்கிரமசிங்ஹ, கணக்காய்வாளர் சேவை அதிகாரி ஏக்க நாயக்க ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here