40 கிராமிய வீதிகளில் இன்று முதல் இ.போ.ச பேருந்துகள் சேவை!

0
50

போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்களின் வசதிக்காக பொருளாதார ரீதியாக இலாபமற்ற கிராமிய வீதிகளில் இன்று (1) முதல் பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சேவைக்காக வரவு – செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிசு செரிய, கெமி செரிய மற்றும் நிசி செரிய ஆகிய திட்டங்களுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 3300 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, இதுவரை பேருந்து சேவைகள் இல்லாத 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here