அவர் வழி தனி வழி! – ரணிலோடு இணையமாட்டார்!

0
109

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிப்பதற்கு சஜித் பிரேமதாச முன்வரமாட்டார். ஏனெனில் சஜித் தனி வழி பயணத்தை விரும்புபவர் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலிலேயே அஜித் மானப்பெரும வேட்புமனு செய்தார்.

எனினும், கடைசி நேரத்தில் தேர்தலில் இருந்து ஒதுங்கினார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். அக்கட்சி ஊடாகவே தற்போது அரசியல் பயணத்தை தொடர்கின்றன.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைவு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கூறியவை வருமாறு,

“ ரணில் விக்கிரமசிங்கவுடன் சஜித் பிரேமதாச இணைந்து செயல்படுவார் என நான் நம்பவில்லை. ஏனெனில் டீம் வேர்க் என்றால் என்னவென்பது சஜித்துக்கு தெரியாது. அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுக்குகூட அவர் தனித்து வந்தார்
.
ஜனாதிபதி தேர்தலின்போது இணைந்து செயல்பட வேண்டும் என சஜித்திடம் கூறினேன். இதனால்தான் என்னை அமைப்பாளர் பதவியில் இருந்து தூக்கினார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்தால்கூட டீம் வேர்க்கிற்கு சஜித் இடமளிப்பார் என நான் கருதவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தில் இருந்து வெளியேறிய நான் மீண்டும் அக்கட்சியில் இணையும் இல்லை.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here