புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் புனித நகரமான அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி நிறைவை குறிக்கும் வகையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
இந்நிலையில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள 15 துணை கோயில்களுக்கான பொதுமக்கள் தரிசனம் பெப்ரவரியில் தொடங்க உள்ளது. இதற்கான முடிவு ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.




