உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விவகாரத்தில் பெரிதும் பேசப்பட்ட சாரா ஜெஸ்மின் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அவரை அழைத்துவர வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு அவசியமனா அழைப்பாணையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெக்க தயாரென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) பாராளுமன்றத்தில் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி முஜிபர் ரஹ்மான் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் சாரா ஜெஸ்மின் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர் இந்தியாவில் இருப்பது குறித்த தவல்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், குறித்த தாக்குதல் சதியாக இருக்குமான என்ற கோணத்திலேயே புதிய அரசாங்கத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், அவசியப்படும் போது அவரை அழைத்து வருவதற்கான அழைப்பாணையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.




