நம்பிக்கையில்லாப் பிரேரணை ​தோற்றுப்போகும்!

0
44

கல்வி சீர்த்திருத்தம் தொடர்பில் எழுந்திருக்கும் பிரச்சினைகளை சாதகமாக கொண்டு எதிர்க்கட்சிகள் தங்களது நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள கொண்டுவரும் நம்பிக்கையில்லை பிரேரணை தோல்வியில் முடியும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கண்டி மல்வத்து மற்றும் அஸகிரிய பீடாதிபதிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு புதிய கல்வி சீர்த்தத்தில் எழுந்திருக்கும் பிரச்சினைகள் குறித்து விளக்கமளித்தபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருவதாகவும் பிரதமர்  தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சிகள் உண்மையாக நாட்டில் கல்வி கற்கும் பிள்ளைகளின் நலனை கருதி இந்த விடயத்தை வௌிப்படுத்தவில்லை என்றும் மாறாக அவர்களின் நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ளவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here