பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இன்று சந்தித்து, கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
“ எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களை அச்சிடும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும்.
சர்ச்சைக்குரிய அந்த மொடியூல் (Module) எந்தவொரு மாணவருக்கும் வழங்கப்படவில்லை.
அச்சிடப்பட்ட அந்த மொடியூலின் அனைத்துப் பிரதிகளும் தற்போது முத்திரையிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” – என்று இதன்போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
6ஆம் தர ஆங்கிலப் பாட மொடியூலின் முதலாம் பதிப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும் மகாநாயக்க தேரர்களுக்கு பிரதமர் விளக்கமளித்தார்.




