நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் வேண்டிகோனர் பகுதியில் இன்று (11) காலை மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நுவரெலியா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் ஹட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற லொறியுடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.




