இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் சுமார் 131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில், அதிகபட்சமான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15 ஆம் திகதி பதிவாகியுள்ளது, அதன்படி, 10,483 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த 15 நாட்களில் இந்தியாவிலிருந்து 23,786 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளனர்.
அதேநேரம், ரஷ்யாவிலிருந்து 14,785 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,166 பேரும் ஜெர்மனியிலிருந்து 9,260 பேரும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.




