வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த தண்ணீர் தொட்டியிலிருந்து 29 தோட்டாக்களைக் கொண்ட வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




