சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால்18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலியின் தலைநகர் சாண்டியாகோவிற்கு தெற்கே சுமார் 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள உபிள் மற்றும் பயோபியோ பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கடலோர நகரமான கான்செப்சியனை ஒட்டிய வறண்ட காடுகளில் தீ இடைவிடாமல் எரிந்து வருவதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வந்தாலும் பலத்த காற்று காரணமாக தீயை அணைக்கும் பணியில் சிக்கல் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




